சங்க கால திணைகளின் இயற்கை வர்ணனைகளை கண் முன் நிறுத்தும் ஆங்கில நுால். சங்க கால மன்னர்களின் செயற்பாடுகளையும், கூத்தர்களை போற்றிக் கொண்டாடிய மரபையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளது.
ஆற்றுப்படை நுால்களை நினைவுபடுத்தும் வகையில் காட்சி, வர்ணனை பாணர் வழியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மன்னரின் ஆலோசகன் கதாநாயகனாக உலா வருகிறான். கூத்தரின் வாழ்வோடு செயல்படுகிறான். அவனுக்கும், விறலிக்கும் இடையே நிலவிய காதலை பேசுகிறது.
ராஜசூய வேள்வி, புத்த மதக் கருத்துக்கள், வேதம் பற்றிய விளக்கம், மணிமேகலை பற்றிய கதை கூறல் என சுவாரசியமாக பயணிக்கிறது. கூத்துக் கலை, இசைக் கலை திறம்பட விளக்கப்பட்டு உள்ளன. தமிழக சமூகப் பண்பாட்டு சூழலை எடுத்துக்காட்டியுள்ளது. எளிமையான நடையில் படைக்கப்பட்டுள்ள ஆங்கில நுால்.
–
ராம.குருநாதன்