சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியாவில் சுதேச சமஸ்தான செயல்பாடு பற்றி எழுதப்பட்டுள்ள சுவாரசியம் மிக்க நுால். ஐரோப்பியர் பிடியில் அகப்பட்டதை கதை போல விவரிக்கிறது. அந்த அதிகாரமையங்களை அழிப்பதில்தலைவர்கள் ஆற்றிய பங்கு பற்றி நெகிழ்வுடன் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சுதந்திரம் பெற்றபோது இருந்த சமஸ்தானங்களின் நிலை, ஆட்சி செயல்பாடு பற்றிய தகவல்கள் உள்ளன. மன்னர்களின் ஆடம்பர போக்கு பற்றி காந்திஜி போன்ற தலைவர்கள் கொண்டிருந்த கருத்துகளும் பதிவாகியுள்ளன.
விடுதலைக்கு பின், தனித்து இயங்க முடிவுசெய்து அடம்பிடித்த மன்னர்களை வழிக்கு கொண்டு வந்து ஒருங்கிணைக்க எடுத்த முயற்சி மற்றும் நடவடிக்கைகள் தெளிவாக தரப்பட்டுள்ளன. அப்போது கிடைத்த அனுபவங்களும் சுவாரசியமாக தரப்பட்டு உள்ளன. சுதந்திர காலத்தில் இந்திய நிலப்பரப்பில் நிலவிய சிந்தனை போக்கை நினைவூட்டும் நுால்.
–
மலர்