ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ள நுால். முப்பது பாசுரங்களையும் பொருளுணர்ந்து, ஒவ்வொரு பாசுரத்திலும் உள்ள சொல்லாட்சியும் கவிச்சுவையும் விளக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டு நோக்கில் ஆண்டாளுக்கும், பெரியாழ்வாருக்கும் இடையிலான வேறுபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் பாடல் புனைந்ததற்கும், ஆண்டாள் பாடல் புனைந்ததற்கும் அடிப்படையிலான பக்தியின் வேறுபாடும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
திருப்பாவைப் பாடல்களில் உள்ள இயற்கை வருணனை, துயிலெழுப்பும் வேளையில் வரும் சோம்பல், தோழியர் மீதான செல்லச்சண்டை, எள்ளல், சாடல் சுவைபட விளக்கப்பட்டுள்ளன. கண்ணன் மீதுள்ள காதலால் ஆண்டாள் தன்னை ஆயர்பாடிப் பெண்ணாகவே மாற்றிக் பாடுவதும் முன்வைக்கப்பட்டுள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு