காட்டில் உயிரினங்கள் வாழும் சூழலை வெளிப்படுத்தும் கலைஞர்களின் அனுபவ பேட்டிகளின் தொகுப்பு நுால். உயிரின செயல்பாடுகளை ஆவணப்படுத்துவதில் உள்ள சிரமம், இன்றியமையாமையை விவரிக்கிறது. காட்டு உயிரினங்களை படம் பிடிக்கும் போது உள்ள சூழ்நிலை மற்றும் மன உணர்வுகள் கேள்வி – பதில்களாக வெளிப்பட்டுள்ளன.
உயிரினங்களை படம் பிடிக்கும் கலைஞர் ஸ்டீவ் வின்டர், ஆவணப்பட ஆக்க முன்னோடி டேவிட் அட்டன்பரோ, முதலை வாழ்வை வெளிப்படுத்த அலைந்த ஸ்டீவ் இர்வின் மற்றும் இந்திய பாம்பு மனிதர் ரோமுலஸ் விட்டேகரின் அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன.
காட்டில் காத்திருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, பண்புகள், தடைகளை தாண்டும் விதம், பதுங்கி வெற்றி கொள்ளுதல், சாகசம் ஏற்படும் மனநிலை, விடாமுயற்சி என நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இயற்கையுடன் நெருங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நுால்.
–
அமுதன்