பாரியின் கொடைத் திறன் எதிரொலித்த இந்தப் பறம்பு மலையில் தான் தலைவியின் காதல் மலர்கிறது. கொடையும், வீரமும் பறைசாற்றிய பூமியாக தான் அன்பும் பெருக்கோடுகிறது. தினைப்புனங்களும், பசியாறும் பறவைகளும் துள்ளும் அருவிகளும் தலைவியின் காதலும் மனதை கொள்ளை கொள்ளும் தருணங்களாகின்றன.
சங்க இலக்கியங்களின் வாழ்கை முறைகளையும், தலைவி, தோழி, நட்பு, அன்பு, பாசம், எதிர்பார்ப்பு, கோபம், பக்தி, காதல் போன்ற உணர்வுகளையும் இயற்கையின் இயல்புகளையும் வெளிப்படுத்தும் சங்க இலக்கிய நாவல் இது.
–
ஹரி