பக்கத்திற்கு ஒரு புதிர் வீதம் நான்கு கட்டங்கள் அமைத்து சொல்லப்பட்டுள்ளன. ஒரு வரிசையிலும் அதற்கு அடுத்த வரிசையிலும் நான்கு கட்டங்கள். முதல் நான்கு கட்டங்களில் சொற்கள் உண்டு. அடுத்த நான்கு கட்டங்களில் மூன்றில் மட்டும் சொற்கள் உள்ளன. இதில் ஒன்றுக்கொன்று பொருத்தி விடுபட்ட வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.
இதை சேர்க்கும்பொழுது பழைய மரபுச் சொல்லாக வர வேண்டும். மூளைக்கு வேலை தரும் விளையாட்டு. தமிழ் கற்க உதவுகிறது. இதை எல்லாருமே முயற்சிக்கலாம். யோசித்து யோசித்து செயல்படலாம்.