மனவளர்ச்சி குன்றிய மற்றும் மூளை பாதிப்பால் ஏற்படும் மனத்திறன் வீழ்ச்சியை முன்வைத்து மருத்துவ அறிவியல் நோக்குடன் விளக்கும் நுால். பகுத்துணரும் திறனில் மெத்தனமும் மூளை பாதிப்பால் வரும் நினைவாற்றல் குறைபாட்டு விளைவையும் முன்வைக்கிறது.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைப் பருவம், முதுமையில் மூளை பாதிப்பால் ஏற்படும் மனத்திறன் வீழ்ச்சி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மனநலக் குறைபாடு மற்றும் நரம்பு மண்டலச் சிதைவை தடுக்கும் நடவடிக்கைகள் பட விளக்கங்களோடு தரப்பட்டுள்ளன. புனர்வாழ்வின் தேவையை உள்ளடக்கிய மருத்துவ மேலாண்மை பற்றிய விழிப்புணர்வைத் தரும் நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு