தாட்சாயிணியின் உடலை சுதர்சன சக்கரம் துண்டுகளாக்கிய போது, சிதைந்த துண்டுகள் விழுந்த இடமெல்லாம் சக்தி பீடங்கள் எழுந்தன. அவ்வகையில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி போன்ற 51 சக்தி பீட வரலாறு கூறும் நுால்.
ஒவ்வொரு பீடத்தின் பெயர் காரணம், புராண நிகழ்வுகள், அமைவிடத்தின் சிறப்புகள், சைவ சமய குரவர்கள், அடியார்கள், அருணகிரிநாதர், வள்ளலார், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றோரால் பாடல் பெற்ற திருத்தலங்களின் பெருமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தலத்தின் தீர்த்தம், விருட்சம், பூஜைகள் நடைபெறும் நேரம் வழிபாட்டு முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ள ஆன்மிக நுால்.
– புலவர் சு.மதியழகன்