அன்பின் ஆழத்தை அறிய உதவும் வகையில் எளிய தத்துவ அலசல்கள் நிரம்பிய நுால். அன்பு சார்ந்த உலகளாவிய பார்வையை அலசுகிறது. எளிய கதைகள் மூலம் கருத்துக்களை புரிய வைக்கிறது.
அடக்கி வைத்தலில் இருந்து விடுதலை, தியானத்தின் உச்சநிலை, காமம் ஒரு அதி உன்னதமான அணு போன்ற தலைப்புகளில் சிந்தனையை துாண்டுகிறது.
காமத்தை மறுகட்டமைப்பு செய்து உருமாற்றுதல், நன்னடத்தையும் ஒழுக்கக் கேடும், நிழலும் நிஜமும், அசலாகவும் இருக்க வேண்டாம், பாவியாகவும் இருக்க வேண்டாம் போன்ற தலைப்புகளில் விவாதங்களை எழுப்புகிறது. இறுதியில் முழுமையை தேடும் பணி என்பதில் முடிகிறது. அன்பு என்ற செயல்பாட்டில் எளிய உண்மைப் பொருளை உணர்த்தும் மாபெரும் தத்துவ விளக்க நுால்.
– ஒளி