ஆன்மிக நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். விவேகானந்தரை வியப்பில் ஆழ்த்திய வலங்கைமான் சோதிடர் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
பாரதிக்கு பெற்றோரைக் காட்சி தர வைத்த கோவிந்தசாமி, தலைக்கனம் பிடித்த புலவரின் கர்வம் நீக்கிய சிறுவன், ஆங்கிலேய ஆட்சி அதிசயக்கும்படி மழை பொழிவித்த தருமபுர ஆதீனம் செய்திகள் வியப்பூட்டுகின்றன.
அரவிந்தர் பயணிக்க இருந்த கப்பல் கடலில் மூழ்கியது, தேவாரம் பாடி பாம்பின் விஷம் நீக்கிய பக்கிரி, உயிர் காத்த திருவருட்பா, தேவரின் பேச்சை கேட்க வந்த பாம்பு என சுவையான செய்திகள் உள்ளன. கோவில் கல்வெட்டு, ஆவணம், வரலாற்றுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்