இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கம் என பல துறைகளில் பங்காற்றிய பெண்களின் உழைப்பை, தியாகத்தை விளக்கும் நுால். இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த காமா அம்மையார், குண்டு துளைத்த போதும் கொடியை கையில் ஏந்தி போராடிய மாதங்கினி ஹஸ்ரா, முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்சலை அம்மாள் பற்றி தரப்பட்டுள்ளது.
தேவதாசி முறையையே ஒழிக்க களமிறங்கிய மூவலுார் ராமாமிர்தம், பத்திரிகை வெளியீட்டாளராக கைது செய்யப்பட்ட கண்ணம்மாள் என, 50க்கும் மேற்பட்ட பெண் சாதனையாளர்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் நிறைந்த களஞ்சியம்.
– இளங்கோவன்