ஆத்மாவை நோக்கி பயணம் செய்ய துாண்டும் நுால். ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு மணி நேரம் பிரார்த்தனை, தியானத்தில் ஈடுபட வேண்டும். தர்மத்தின் வழியில் நின்றால், எந்த சக்தியாலும் நெருங்க முடியாது என பதிவிடப்பட்டுள்ளது.
பூஜை வழிமுறை விரிவாக தரப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பு, வாழையின் பயன்கள் மற்றும் முதுமை முடிவல்ல என்கிறது.
பாலியல் வன்கொடுமை, மகளிர் தினம் என விழிப்புணர்வு செய்திகள் நிறைந்துள்ளன. சிவயோகஞானம், கும்பை சித்தரின் கருத்துக் காவியம், வேதாந்த சாரத்தின் சுருக்கம் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்