அன்றாட வாழ்க்கையில் கணிதம் இன்றி எதுவும் இல்லை என்பதை தெளிவாக அடிக்கோடிட்டு காட்டும் நுால்.
கணிதத்தின் கோட்பாடுகளோ, சூத்திரங்களோ வாழ்வில் அவ்வளவாக பயன்படாது. அதன் அழகை தெரிந்து கொள்ள வேண்டும் என உழைப்பவர்களுக்கு மட்டும் தான் கணிதம் வசப்படும். இதை, இங்கிலாந்து கணித மேதை ஹார்டி புத்தகத்தை மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது அருமை. அலீல்களும் அல்ஜீப்ராவும் பகுதியில், கணித ஆராய்ச்சிக்காக ஹார்டி தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததையும், அது தொடர்பான சம்பவங்களையும் சுவாரசியம் குறையாமல் தருகிறது.
எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. கணித ஆர்வலர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
– வியாஸ்