பக்தர்களால் கருணைக்கடல் என வணங்கப்படும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கூறுபவராக இருந்தார் என்பதை எடுத்துரைக்கும் நுால்.
உதாரணத்துக்காக சில முத்துக்கள்...
* கலை என்பது உழைப்பால் மட்டும் வருவதில்லை. சகலகலாவல்லியான அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு வேண்டியிருக்கிறது
* அன்பால் உலகிலுள்ள வேற்றுமை மறையும். இதனால், உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வலுப்படும். உடல் உபாதையைப் போக்க, இயற்கை வைத்தியப்படி உணவே மருந்து என எடுத்துக்கொள்ள வேண்டும். காஞ்சிப் பெரியவர் முற்றும் அறிந்த ஞானி என்றே சொல்லத் தோன்றுகிறது.
– இளங்கோவன்