ஒரு நாட்டை அடிமைப்படுத்த, அங்குள்ள மண் வளம், செல்வம், மனித உயிர்களை பலி வாங்கி அதிகாரத்திற்கு வரும் போக்கை கூறும் நாவல். அந்த காலத்தில், ‘ஆக்கள்’ என்ற மாடுகள், மிகப்பெரிய செல்வமாக கருதப்பட்டுள்ளன. அவற்றை, எதிரி நாட்டுப் படைகள் திருடிச் சென்று, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதை கூறுகிறது. தொழில்நுட்பம் வழியாக, மக்களுக்கு குடிமை எண் வழங்க அரசு திட்டமிடுகிறது. இதற்கு உதவும் சிரியன் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் நித்திலன்.
மனித பொம்மை தயாரிக்கும் இந்நிறுவன தலைவரின் உழைப்பு சுரண்டலை பேசுகிறது. தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் நவீன குற்றங்களை பட்டியலிடுகிறது.
மண் வாசமும், அறிவியல் தொழில்நுட்பமும் பின்னி பிணையும் நாவல்.
– -டி.எஸ்.ராயன்