தீமைக்கும், அன்பிற்கும் இடையே நடக்கும் போரில், அன்பு தன் வெற்றியை உறுதியாக நிலைநாட்டும் என்பதை விளக்கும் அற்புதமான கதை. ஒரு முதியோர் இல்லத்தில் நடக்கிறது. நாயகன் சேது, நாயகி ஸ்வேதா அழகாகச் செதுக்கப்பட்ட பாத்திரங்கள்.
கதையில் மற்ற பாத்திரங்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வுலகில் அன்பு தான் நிஜம் என்று முழங்குகிறது. முதியோர் இல்லங்களைப் பற்றிய சரியான பார்வையை புரிந்துகொள்ள எளிமையாக தந்தது அருமை.
முதியோர் இல்லம், ஆதரவற்றவர்களுக்கான இல்லம் அல்ல; இளமையில் ஓடி களைத்த நதிகள், ஓய்வுக் காலத்தில் அன்பைப் பரிமாற சங்கமிக்கும் புனிதக் கடல் என்பதை மென்மையான வார்த்தைகள் அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
– செல்வி நேத்ரா