பாரத பண்பாடு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் நுால். பழங்கால பாரதத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. பண்பாடு பற்றிய நுண்ணறிவு பெற, தாக்குதலை எதிர்கொள்ளும் வழிகளையும் காட்டுகிறது. குடும்பம் மற்றும் சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கும் நிலைத்த தன்மைக்கும் ஒருமைத்துவ உணர்வே அடிப்படை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடவுள் நம்பிக்கை நம்மில் தேட வேண்டியது என எளிமையாக வழிகாட்டுகிறது. ஆன்மிக சுதந்திரம் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை குறித்து சரியான விளக்கத்தை அளித்துள்ளது. இந்திய பண்பாடு குறித்து தெளிவு பெற உதவும் நுால்.
– முகில் குமரன்