நுண்ணிய அரசியல் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு. இருளுக்கு பின் விடியல் வந்து கொண்டிருக்கிறது என தன்னம்பிக்கை ஊட்டுகிறது. கொரோனா மரணங்களையும், அதன் கோர முகங்களையும் கோடிட்டு காட்டுகிறது. தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு, சைத்தான்களால் சபிக்கப்பட்டு, மனிதர்களால் விளையாடப்படும் மாய விளையாட்டு என சினிமாவை தோலுரிக்கிறது.
இடும் வாய்க்கரிசியில் எவர் பெயர் எழுதியிருக்கும் என, எரியும் பிணம் எழுந்து வந்து சொல்லுமா என கேள்வி கேட்கிறது. சாலை ஓவிய கடவுளும், அதனால் கிடைக்கும் பசியாற்றலும், பின் விளக்குமாறால் கழுவப்படும் சூழலையும் துடைத்தெறிகிறது. ஒவ்வொரு கவிதையும் சமூக நிகழ்வுகளை அலசுகிறது.
– டி.எஸ்.ராயன்