‘அவளன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதைத் தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்து சொல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதைமாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களை தாங்கியே நடைபயணிக்கிறது.
காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துகள் படைக்கப்பட்டு உள்ளது சிறப்பு. வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டத்துடன் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு, உலவவிட்டு நிலவென வாராயோ என, பூமியில் நடக்கும் அன்னையின் அன்பு கலந்த அதிசயங்களை உணர்த்தியிருக்கிறார்.
– எம்.எம்.ஜெ.,