தொழிற்சாலைகளில் ஒழுங்கு நடவடிக்கை, விசாரணை நடைமுறைகள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். மனித வள மேம்பாட்டுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு உதவும் வகையில் உள்ளது.
இயற்கை நீதி, ஒழுங்கு நடவடிக்கை, புகார் கடிதம் தரும் முறை, முதல் கட்ட விசாரணை, புகார் எழுதும்போது கவனிக்க வேண்டியவை என, முறையாக துணை தலைப்புகளில் தகவல்கள் சட்டப்பூர்வமாக தரப்பட்டுள்ளன.
குற்றத்துக்கான தண்டனை, நேரடி விசாரணையில் நிரூபிக்க தேவையான நடைமுறை போன்ற தலைப்புகளிலும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மனித வள மேம்பாட்டு பணிகளில் உதவும் நுால்.
– ராம்