சமூக நடப்புகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பம், கல்வி, கடமை, திருமணம், வயோதிகத்தை மையமாக உடையது.
இளம் தம்பதிகள் இடையே நடக்கும், உரையாடல், கோபம், அன்பை வெளிகாட்டும், ‘ஊடலடி அது உனக்கு’ கதை சொல்கிறது. திருமணத்திற்கு, இருமனம் தான் முக்கியம் என, வாழ்க்கை தேர்வு எழுத கூறுகிறது.
காதலர்களிடம், அறிவு, ஒழுக்கத்தை முதன்மையாக பார்க்க வேண்டும் என்கிறது. ஒரு பெண்ணின் திருமண முன், பின் வாழ்க்கையை உணர்ச்சி பொங்க அலசுகிறது. பெற்றோரை ஊதாசீனப்படுத்தும் பிள்ளைகளின் மனசு கல்லா என கேட்கிறது.
கல்வி கிடைக்காத குழந்தைகளின் எதிர்காலம் வீணாவதை, தலைமுறை அவலம் என்கிறது. முதியோர் இன்னலை, இளையோர் உணர்ந்தால் வலிகள் குறையும் என்கிறது.
– -டி.எஸ்.ராயன்