குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
இளைஞர் சமுதாயம் கடமையை மறந்து செயல்படுவதை, ‘துருப்பிடித்து வீணாகலாமா...’ கதை விவரித்து சிந்திக்க வைக்கிறது. வசதி படைத்தவர், ஏழை என பாகுபாடுகள் பார்க்காமல், மது உயிரை குடித்து விடும் என, ‘குடி குடியைக் கெடுக்கும்’ கதை உணர்த்துகிறது.
செல்லமாக வளர்த்த ஒரே மகன், பெண் சகவாசத்தில் விபத்தில் சிக்கியதும், தந்தை மனமுடைவதை ‘கூடாநட்பு’ என்ற கதை, கவலையுடன் கூறுகிறது. டீன் ஏஜ் பருவ, வாழ்க்கை தடுமாற்றத்தையும் அலசுகிறது. கொரோனா தொற்று நோய் காலத்தை மையப்படுத்தி மக்களின் துயரங்களை கதைகள் பேசுகின்றன.
– டி.எஸ்.ராயன்