வேட்டையாடுவதற்கும், எதிரிகளை வீழ்த்துவதற்கும் ஏந்திய ஆயுதம் துப்பாக்கி. அது மிகப்பெரிய விளையாட்டுத் துறையாகி, இந்தியாவில் சாதித்தவர் வாழ்வை கூறும் நுால்.
உடல் இயக்கம் குறைவாக இருந்தாலும், மனதை ஒருநிலைப்படுத்தி, கூர்ந்த எண்ணத்தோடு செயல்பட்டால், இந்த விளையாட்டில் சாதிக்கலாம் என்கிறது. கவனம் சிதறினால் குறி தவறிவிடும்.
ராணுவம், காவல் துறையில் பணியாற்றுவோருக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பிருந்தது. இப்போது, முறையாக பயிற்சி பெற்றவர் பங்கேற்று தலைசிறந்து விளங்குகின்றனர். கடினமான சூழலைத் தாண்டி சாதித்த அஞ்சலி, அபூர்வி, அனிதா தேவி, இளவேனில், இஷா சிங், ரூபா என, 28 சாதனையாளர்களை பட்டியலிடும் நுால்.
– -வி.விஷ்வா