சலிப்புடன் கடந்து செல்லும் வாழ்க்கையை நின்று நிதானமாக நோக்கி, விமர்சன கண்ணோட்டத்துடன் அனுபவங்களை கூறும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நகைச்சுவை உணர்வு ததும்ப படைக்கப்பட்டுள்ளது.
சம்பவங்களின் கோர்வையாக புத்தகத்தின் ஒரு பகுதி அலைபேசி உரையாடலில் தோழி, ‘பாமரன்... கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... இடம் ஏதாவது வாங்கிப் போட்டிருக்கீங்களா...’ என அக்கறையுடன் கேட்கிறார். பதிலாக, ‘ஆமாங்க, இங்குள்ள முத்தண்ணன் குளம் பக்கத்துல ஆறுக்கு ரெண்டரையடி இருக்கு...’ என நகைச்சுவையாக பதில் சொல்கிறார்.
புரியாத தோழி, ‘நாங்கெல்லாம், கிரவுண்டுன்னு தான் சொல்லுவோம்... அதென்ன கணக்கு ஆறுக்கு ரெண்டரை...’ என கேட்கிறார். அதற்கு, ‘அடக்கத்துக்குத்தான்...’ என, இடுகாட்டு நிலத்தை அடக்கத்துடன் பதில் சொல்கிறார். இது போன்ற சுவாரசியங்கள் நிறைந்த நுால்.
– ஒளி