பழங்கால தமிழகத்தில் சிறப்பாக விளங்கிய போர்க்கலையை உரிய ஆவணங்களுடன் அறிமுகம் செய்யும் நுால். எட்டு பகுதிகளாக குறுந்தலைப்புகளில் தகவல்களை தொகுத்து தருகிறது.
வர்மக்கலையின் அடிப்டையை தெளிவாக்குகிறது. இந்த கலையின் வடிவத்தை படிப்படியாக விளக்குகிறது. வர்ம பாதிப்பு ஏற்பட்டால் உரிய பரிகாரமாக வைத்தியமும், மருந்து செய்முறையும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
நாடி சாஸ்திரம் பற்றிய விபரங்களும் உள்ளன. அகஸ்திய முனிவரின் மெய்ஞான நாடி, போகரின் நாடி சாஸ்திரங்களின் மூல நுால்களும் இணைக்கப்பட்டுள்ளன. சிறிய வாக்கியங்களில் புரியும் விதமாக தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. தமிழர் போற்றி வளர்த்த பழங்கலையை அறிய உதவும் நுால்.
– திசை