கிராம வாழ்க்கையை வரலாற்று பூர்வமாக முன்வைக்கும் நாவல். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியினர் வாழ்வை காட்சிப்படுத்துகிறது.
கிராமமும், வேளாண் சமூகமும் உள்ளபடி காட்டப்பட்டுள்ளது. வேளாண்மை சுருங்கும்போது கூட்டுக்குடும்பம் பிரிகிறது. விட்டுக் கொடுக்கும் இயல்பு குறைந்து போட்டி, பொறாமை மிகும் என்பதை எடுத்துரைக்கிறது.
மனித மனம் கொடூரமாவதை விளக்குவதுடன், ஜாதி மோதல்கள் ஏற்பட்டு விழாக்கள் நின்று போவதையும் காட்டுகிறது. எளிய உரையாடலில் நல்ல நகைச்சுவை கலந்துள்ளது. குடும்பத்தை முன்னிறுத்தி, கிராமத்தை காட்சிப்படுத்தி, மனித மனம் எப்படிப்பட்டது என்பதை எளிமையாக முன்வைக்கிறது.
உண்மையை புனைவுடன் தரும் மண் மணம் கமழும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்