அன்பு, பாசம், பாதுகாப்பு, பண்பாடு என்ற போர்வையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை, எளிமையாக புரியவைக்கும் கருத்துள்ள நுால்.
சமூகத்தில் இயல்பாக நடந்து வரும் செயல்கள் பெண்களை அடிமைப்படுத்துவதை விளக்குகிறது. அவற்றை தீர்க்கும் வழிமுறையையும் முன் வைக்கிறது. அத்தியாயத்தின் இறுதியில், பொன்மொழி போல் சாராம்சத்தை சுருக்கி தருகிறது. பெண் உயர்வுக்கு ஏற்படும் தடைகளை அகற்ற சிந்திக்க வேண்டிய வழிகளை காட்டுகிறது.
பெண்ணின் உடல், மனதை பாதிக்கும் விஷயங்கள் பற்றி பேசுகிறது. பெண்கள் அணியும் உடை வடிவமைப்பை, ஆண்கள் தயாரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகிறது. சமூகத்தில் வழக்கமாகிவிட்ட பல செயல்கள் மீது கேள்வி எழுப்பி, சிந்திக்க துாண்டும் நுால்.
– மதி