ரஷ்ய எழுத்தாளரின் நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரிதான அறிவியல் கண்டறிதலை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது.
கல்லுாரி நாட்களில் அழகிலும், திறமையிலும் சிறந்தோங்கிய சார்லி மீது கொண்ட பொறாமையால் மன அழுத்தத்திற்கும், முரட்டுத்தனத்திற்கும், சினத்திற்கும் ஆளானான் அர்பன்.
நோய், துயரங்களை ஏற்கும் ஒரு மனித பிரதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் விஞ்ஞானி. அவர், ‘ஆல்வா’ என்பவனை படைத்து, அர்பனின் மன அழுத்தம், துயரங்களை செலுத்தினார்.
கண்டுபிடிப்பு வெற்றிகரமாகி அர்பன் நிம்மதியாக இருந்தானா, நிகழ்ந்தது என்ன என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் இந்த புதினம்.
– புலவர் சு.மதியழகன்