அனுபவங்களை சொற்கள் வழியாக கடத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 108 தலைப்புகளில் மனிதர்கள் மனதை காட்டுகிறது. புதைந்து கிடக்கும் நம்பிக்கையை தேட சொல்கிறது. நடைபயிற்சி செல்பவர்களை பூத்துாவி வாழ்த்தும் பூங்காவின் பசுமையை உணர சொல்கிறது. மதிய உறக்கத்தின் நியாயங்களை பட்டியலிடுகிறது. சவப்பெட்டி செய்பவரின் குமுறலை வலியுறுத்துகிறது.
பரம்பரை வீடுகளின் மகத்துவத்தை அசை போட வைக்கிறது. தேநீர் சந்திப்புகளில் கிடைக்கும் புத்துணர்வை அனுபவிக்க சொல்கிறது. கஜா புயல் இழப்புகளை போன்று, இனி வராமல் இருக்க வலியுடன் பேசுகிறது. கொரோனா காலத்து கொடிய நாட்களை, ஒரு கணம் கூட இனி பார்க்கக்கூடாது என அலசுகிறது. கவிதை எழுதுவோருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்