உளவியல் சிந்தனைகள் உடைய நுால். மிக எளிய நடையில் இரண்டு பேர் பேசுவது போல அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பு முதல், குறை தேடாமல் இருப்பது வரை கருத்து புதையலாக உள்ளது.
ஜீவன் ததும்பும் உணர்ச்சிப் பிழம்பை, நகைச்சுவை தேன் தடவி படைத்து இருப்பது சுவாரசியம் தருகிறது. அனுபவ சாரம் உடையது. மூளையிலே, ‘பீட்பேக் மெக்கானிசம்’ என்பது, மூளை இல்லாதவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
விலங்கினங்களை பற்றிய விவரிப்பு சிறப்பாக உள்ளது. ‘பிள்ளைகளிடம் என்ன இல்லை என பார்க்கக் கூடாது; என்ன இருக்கிறது’ என்று பார்த்து அதை வளர்க்க முயற்சிக்க வேண்டும். மாணவச் செல்வங்களை செம்மைப்படுத்த உதவும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்