அறிந்திருக்காத தகவல்கள், செய்திகள் அமையப்பெற்றுள்ள நுால். பொது அறிவு பெட்டகமாக திகழ்கிறது.
புதிய கண்டுபிடிப்பு செய்திகளையும், காலங்காலமாய் பயன்படுத்தும் பொருட்கள்- பற்றிய விபரங்களையும் புரியும் வகையில் குறிப்பிடுகிறது. வரலாற்றுச் சின்னங்கள் ஏற்பட்ட பின்னணி போன்ற அடிப்படை தகவல்களையும் தருகிறது.
மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் செய்திகளை உடையது. ஆங்கில மாதங்களான ஜனவரி, பிப்ரவரி என வரிசையாக ஏற்பட்ட காரணம், கிழமை பெயர் காரணங்கள் தரப்பட்டுள்ளன. ரூபாய், பென்சில், பேனா, ஒலிம்பிக், காப்பி, ஜீன்ஸ் என்ற தலைப்புகளில் வரலாற்றின் உண்மைக் கதை, உருவாக்கப்பட்ட விதம் பற்றிய தகவல்களை கூறியிருக்கும் நுால்.
– வி.விஷ்வா