மலேஷியா, கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாட்டு சிறப்பு மலராக மலர்ந்துள்ள நுால். தமிழ் கலை, கலாசாரம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த சிறப்பு மலர், தமிழர் பண்பாடு, கலை மற்றும்வரலாறு, இசை, இலக்கியம், சிறார் இலக்கியம், பதிப்பியல், அறிவியல், கணினி அறிவியல், தொல்லியல் என்ற தலைப்புகளின் அடிப்படையில் கருத்து மிக்க கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையிலும் முக்கிய அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
தமிழர்கள் வாழும் நாட்டு அறிஞர்களின் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. தமிழின் நவீன செயல்பாடுகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– மதி