உணர்ச்சி, கற்பனை உடைய கருத்துகளை துாண்டும் விதமாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சிந்தனையை மேம்படுத்தும் வகையில் உள்ளன.
வல்லினம், கீச்சிடல், வேர்களும் மரங்களும் முதலான கவிதைகளில் துவங்கி, பசுமை சக்தி, மலையழகு, கும்மிப் பாட்டு, தேநீர் இடைவேளை என, 139 தலைப்பில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
பெருங்கடலில் சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்த மீன்களில் சிலவற்றை, அலைகள் சுடுமணற்பரப்பின் மீது துாக்கியெறிகின்றன. அதை எண்ணி மீதமுள்ள மீன்கள் கண்ணீர் விட்டாலும், வலிய பாறைகளாக மாற்றி வலிமை பெறுவதாக சொல்கிறது. புள்ளிகளுக்கு ஒரு வாழ்க்கை என்ற கவிதையில் காதல், உடன் பிறந்தோரின் பாசம், பெற்றோரின் அன்பு, பிள்ளைகளின் வாஞ்சை என ரசிக்க வைக்கிறது.
– வி.விஷ்வா