மூளைக்கு வேலை தரும் கேள்விகளையும், உரிய விடைகளையும் தந்துள்ள நுால்.
பெரும்பாலானோருக்கு கணக்கு பாடம் பிடிப்பதில்லை. அதை மாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் கலந்து பயணிப்பதை சொல்கிறது. அதைப் பாடமாக பயிலும் போது கடினமாக இருப்பதற்கு உரிய காரணத்தை புலப்படுத்துகிறது.
மனிதருக்கு புரிந்து கொள்ளும் தன்மை வேறுபடும். பள்ளியில் கணக்கு விடையை கூறும் போது, புரிந்து கொண்டால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். புரியாதவருக்கு கணக்கு வரவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், மாணவ – மாணவியர், கணக்கில் ஆர்வமுள்ளோருக்கு பயனுள்ள நுால்.
– வி.விஷ்வா