சிவனடி சேர்ந்த 63 நாயன்மார்கள், ஒன்பது தொகை அடியார் வரலாறு கூறப்பட்டுள்ள நுால். பாடல்கள் உணர்த்தும் வரலாற்றுச் செய்திகளை, எளிய உரைநடையாகக் கதை வடிவில் கூறுவதால் படிக்க எளிதாக உள்ளது.
முதலில் சுந்தரர் வரலாறு தொடக்கமும், நடுவில் மற்ற நாயன்மார்களின் வரலாறும் கூறி, இறுதியில் சுந்தரர் வரலாறு நிறைவு செய்துள்ளது. சேக்கிழார் வரலாறு தொடக்கத்தில் இருப்பது உதவும்.
விருந்தினருக்கு அமுது அளிக்கும் முறையை இளையான்குடி மாற நாயனார் வரலாறும், கொடையில் உலக இயல்பிற்கு மாறாக வாழ்ந்த இயற்பகை நாயனார் வரலாறும் இன்றைய சமுதாயத்தில் வாழும் வழிமுறையை உணர்த்துகின்றன. பரவசமூட்டும் ஆன்மிக நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து