பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியை வலுவாக்கும் உத்திகளை எடுத்துரைக்கும் நுால். நிகழ்வுகளை நிதானமாக அணுகி எழுதப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபட்ட வியூகங்களை வகுத்து, முறையாகச் செயல்படுவது குறித்த விபரங்கள் பதிவாகி உள்ளன.
தேர்தலில் ஏற்படும் பின்னடைவுகளை நன்கு ஆய்வு செய்து, அந்தந்த பகுதிகளில் தகவல் சேகரித்து, நுட்பமாக செயல்படுவது பற்றிய விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்திய சிந்தனை மரபுக்கு ஏற்ப, தேர்தல் உத்திகளை வகுத்து களம் காணுவதை விவரிக்கிறது. உலகின் மிகப்பெரிய கட்சியின் வளர்ச்சிக்கு, பிரதமராக பொறுப்பு வகிக்கும் மோடி கையாண்டு வரும் உத்திகளை ஆய்வு பார்வையுடன் சொல்லும் சுவாரசியமான நுால்.
– வீரா