ஜாதி சமூகத்தால் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள நாவல் நுால்.
கிராமத்தில் பிறந்த ஒரு ஜாதி பிரிவைச் சேர்ந்த இளைஞன், அருகிலுள்ள நகரில் அஞ்சலகத்தில் பணிபுரிகிறான். அங்கு உயரதிகாரியாக மற்றொரு ஜாதி பிரிவைச் சேர்ந்தவர் பணியில் இருக்கிறார். இருவருக்கும் ஏற்படும் உறவை வைத்து பின்னப்பட்டுள்ளது.
நரிக்குறவர் சமூக மக்கள் வாழ்க்கை நிலை இன்னும் மாறாமல் உள்ளது பற்றி கூறப்பட்டுள்ளது. முடிவு கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. ஜாதி பிரச்னைக்கு சவுக்கடி கொடுக்கும் நுால்.
– முகில் குமரன்