புகழ் பெற்ற நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரின் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லும் நுால். கல்வித் தொண்டும் தமிழிசை வளர்த்தது, தொழில் பல பெருக்கிய திறன் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
ராஜா சர் முத்தையா செட்டியார் சென்னை மாநகராட்சி முதல் மேயராக ஆனவர். மேயர் அணியும் தங்க ஆரம், பொன் பதக்கம், வெள்ளியால் நாலரை அடி கட்டிய தண்டம் செய்து கொடுத்தவர்.
கல்வி வள்ளல் என்றால் அழகப்பர் தான். அதை காட்டிலும் அவரது விசுவாச உணர்வு போற்றுதலுக்கு உரியது. பொருளாதார சிக்கலின்போது உதவியவர்கள் பெயரால் விடுதி அமைத்தது கூறப்பட்டுள்ளது.
பண்டிதமணி முத்தப்பர், கவியரசு கண்ணதாசன், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றியும் எழுதப்பட்டுள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்