நாவல், சிறுகதைகளை திரைக்கதைகளாக படைத்துள்ள நுால். இடம், கதாபாத்திரம், சூழல் என காட்சியாக பதிய வைக்கிறது.
குழந்தையின்மையால் விரட்டப்பட்ட சாந்தா, கணவனால் துரத்தப்பட்டு மகளை விடுதியில் படிக்க வைக்கும் பெண்ணியவாதி பூரணி, இருவர் சந்திப்பு தருணங்களை அனுபவ பகிர்வாக சொல்கிறது.
நெசவாளர் போராட்ட தீர்வு, ஜாதி அடிப்படையில், தொழிற்சங்க அடிப்படையில் கிடைக்குமா என ‘தறிநாடா’ நாவல் கேட்கிறது. தண்ணீர் பொது தானே, ஏன் மாநிலங்கள் பிரச்னையாக மாறுகிறது என அரசியல் பேசுகிறது.
திருமணமாகாத பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் நடக்கும், பாலியல் சுரண்டலை வெளிக்கொண்டு வருகிறது. அழகு என்பது முகத்தில் அல்ல என்பதை தோலுரிக்கிறது.
-– -டி.எஸ்.ராயன்