சமூக, பொருளாதார, பண்பாட்டு மையங்களாக கோவில்கள் விளங்கியது பற்றிய வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறும் நுால். ஆய்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளது.
சமய நம்பிக்கையுடன் கோவில்கள் வழிபடும் மையங்களாக விளங்குகின்றன. வரலாற்றில் இவை மக்களின் வாழ்வு சார்ந்த மையங்களாக விளங்கியதை எடுத்துக்காட்டுகிறது. கோவில் தொடர்பான உடைமைப் பிரிவினர் பற்றி விளக்குகிறது. அது சார்ந்த பணியாளர் பற்றியும் வெளிப்படுத்துகிறது.
விவசாயத்துடன் கோவில்களுக்கு இருந்த தொடர்பு, பண்பாட்டு கூடங்களாக விளங்கும் ஆதாரங்களை ஆய்வுப் பார்வையில் தருகிறது. கோவில்களை வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ள நுால்.
– மதி