கன்னட நாடக உலகைச் சித்தரிக்கும் நாவல்.
சமூகத்தில் நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கம், நாடக மனிதர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை அழகாகப் பேசுகிறது. கதாபாத்திர தன்மை, குணாதிசயம் திரை போல மாறி மாறி விரித்தும், விவரித்தும் செல்கிறது.
சித்தரிக்கப்படும் ஆண் – பெண் உறவுச் சிக்கல்கள், மேடை அமைப்பு, சரித்திர நாடக பங்களிப்பு பற்றி விவரிக்கிறது. நாடக உலகின் சவால்களான, நடிகர், நடிகையரை வளைக்கும் போட்டியில் கம்பெனிகளின் சூழ்ச்சிகள், ரசனை மாற்றங்களை ஆவணமாய் விவரிக்கும் நாவல்.
– ஊஞ்சல் பிரபு