நபி பெருமான் வாழ்க்கை சரிதத்தை சுருக்கமாக அந்தாதியில் தந்திருக்கும் நுால். இஸ்லாமிய இலக்கியங்களை கற்று படைக்கப்பட்டுள்ளது.
‘மக்கா நகரில் தோன்றி’ எனத் துவங்கி, ‘மக்கா நபியே போற்றி’ என முடியும், 100 பாடல்களில் அளப்பரிய இறை பற்றுதலையும், எம்மதமும் சம்மதம் என்ற உயரிய நோக்கத்தையும் சொல்கிறது.
பெண்ணின் பெருமை, கல்வியின் சிறப்பு என நபிகள் நாயகத்தின் போதனைகளை எடுத்துக் காட்டுகிறது. அந்தாதியாகப் புனைந்துள்ள திறன் சிறப்புக்கு உரியது. நபி பிறப்பு முதல் முடிவு வரை வாழ்வு, நெறிமுறைகள், போதனைகள், சாதனைகளை அழகுற வரிசைப்படுத்திக் காட்டியுள்ளது.
நபிகள் மீது நம்பிக்கை கொண்டோர் படிக்க வேண்டிய புத்தகம்.
– ஊஞ்சல் பிரபு