வைணவமே ஜோதிட சாஸ்திரத்தின் வித்து என உரைக்கும் நுால்.
சைவம் சோதிடத்தை வெளிப்படையாகச் சொல்கிறது. வைணவம் மறை பொருளாகப் பேசுகிறது. கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் சுழல்வதால் நேரும் கதிர்களில் தான் ஆத்மா பிறக்கிறது; உடல் உண்டாகிறது. வினைகளுக்கு ஏற்ப பரம்பொருளோடு சேர்கிறது.
கர்ப்பத்திலிருந்து வெளிவரும் போது, எந்த நட்சத்திர பாதத்தில் பற்றுகிறதோ அதுவே அஸ்திவாரம். இதை பாதசார அட்டவணை சொல்லும்.
ஜாதகத்தில் பலவீன கிரகங்கள் இருந்தால், உரிய நட்சத்திரத்திற்குரிய திவ்ய தேசங்களை தேடி சென்று வழிபட்டால் நற்பயன் வாய்க்கும். சோதிட பரிகாரம் கூறி, வைணவ பக்தியை வளர்க்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்