அறிவொளி மற்றும் தியானத்தின் அடிப்படையை உணர்த்தும் ஜென் தத்துவ சாராம்சத்தை விளக்கும் நுால். ஒவ்வொன்றும் தனித்துவமுள்ள முழுமையான அழகு, மதிப்பை கொண்டிருக்கின்றன. அவற்றை ஒப்பிடக்கூடாது என்பதை நீதிக் கதைகள் வழியாக விளக்குகின்றன.
அறிவொளி பெறுவது கடினமல்ல; வஞ்சகத்தை வென்று ஞானம் பெறுவதே கடினம். மெய் ஞானம் என்பது ஏமாற்றம், அறிவொளிக்கு அப்பாற்பட்டது என உரைக்கிறது.
வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.