அடுத்தவர் உடுத்தும் அழுக்கை நீக்கி, வெண்மையாக்கி சுகாதாரமாக வாழ வைக்கும் வண்ணார் சமூகத்தின் வாழ்வியலை கூறும் நாவல். பேசும் மொழி, பண்பாடு, குடும்ப சுக துக்க சடங்குகளை அடையாளங்களுடன் கூறுகிறது. திருமண ஏற்பாட்டில் நடக்கும் நிகழ்வுகள், பெண் வீட்டாரின் தவிப்பு, புகுந்த வீட்டு வாழ்க்கையை பதிய வைக்கிறது.
சகோதர பாசம் துவங்கி, ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் எடுத்துரைக்கிறது. மனித உள்ளத்தின் அழுக்கு முதல், உலக அழுக்கு வரை உணர்வாக வெளிப்படுத்துகிறது. சலவை தொழிலின் நுணுக்கங்களை கண் முன் நிறுத்துகிறது.
இரு வேறு சமூகத்தின் நட்பின் ஆழத்தை பதிய வைப்பதுடன், ‘நம் காலத்திற்கு பிறகும், நம்ம பசங்க இதே நட்புடன் பழக வேண்டும்’ என கூறுவது, ஜாதியை தகர்க்கும் நம்பிக்கையை ஊட்டுகிறது.
– டி.எஸ்.ராயன்