ஆங்கில கவிதையின் தமிழ் வடிவமாய் அமைந்த காவிய நுால்.
சிதைந்த கப்பல் ஒன்று ஆளில்லா தீவில் தண்டு ஊன்றுகிறது. அதை சீர் செய்தபின் புறப்படலாம் என அலெக்சாண்டர் செல்கிர்க்கு சொல்வதை, கப்பல் தலைவன் ஏற்கவில்லை. கொள்ளையர் உலாவும் பகுதி என்ற மறுப்பை செல்கிர்க்கு ஏற்கவில்லை.
பழுதான கப்பலில் பயணித்து உயிரை மாய்க்க விரும்பவில்லை என்று தீவிலேயே தங்கி விடுகிறான் செல்கிர்க்கு. அங்கு கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடு தான் சுவாரசியமாக பதிவாகி உள்ளது.
உணவு, தங்கும் இடம், உடை இன்றி அலைந்து பலவற்றையும் அறிந்து கொண்டான். அச்சம் அகன்றது. வாழ்க்கை என்பது அபாயம், ஆச்சரியங்களை உடையது என தெளிவடைகிறான். இயற்கையை நேசிப்பவர்களுக்கு பிடித்தமான நுால்.
– முகிலை ராசபாண்டியன்