வரலாறு தொடர்பான விபரங்கள் உடைய சிறுகதை நுால்.
முதல் கதை, ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்’ இந்திராவின் தனித்துவத்தை விளக்குகிறது. பெண்ணைப் பற்றிய புரிதலை கவனிக்க வைக்கிறது.
உறவை மையமாக உடைய ‘படுக்கை’ சிறுகதை, அதிக கோபத்தில் உள்ள கணவன் அடங்கும் காரணத்தை சுட்டிக்காட்டுகிறது.
தலைப்பாக வரும், ‘சிந்துவெளி நாகரிகம்’ பகுதி வரலாற்றை கூறி, மாதவிடாய் பற்றி விளக்கியுள்ளது. பந்துல மன்னன் பெண்ணுக்கு இடும் சாபமே மாதவிடாயாக தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. சுவாரசிய கதைகளை உள்ளடக்கிய நுால்.
-– குமரன்