கந்தர் அனுபூதி பாடல் மூலமும், விளக்கங்களும் நிறைந்த நுால். வணங்கும் விதத்தில் எந்திரமும், மந்திரமும், நைவேத்தியமாக என்ன படைக்க வேண்டும் என்ற குறிப்புகளும் தெளிவாக உள்ளன.
‘ஆடும் பரிவேல் அணி சேவல் என பாடும் பணியே பணியாய் அருள்வாய்’ என்பது எளிதில் பொருள் விளங்கும் அருள்வாக்குகள். கல்வி அறிவில் மேம்பட, தீராத நோய் அகல, எமன் தண்டனை விலக்க, அகந்தை ஒழிக்க என, பாடல்களின் குவியலாக உள்ளது.
சூழ்நிலைக்கு ஏற்ப மனிதன் எண்ணங்களும் மாறும் விதத்தை சொல்லும் நுால்.