வாழ்விலும், தொழிலிலும் முன்னேற வழிகாட்டும் மேலாண்மை ரகசியத்தை அனுபவப்பூர்வமாக விளக்கும் நுால். ஐந்து பகுதிகளாக கருத்துக்களை வழங்குகிறது.
செயல்முறைகளையும், மதிப்புமிக்க அமைப்புகளையும் உருவாக்குவது தான் மேலாண்மை கலையின் முதற்கட்டம் என்பதை நிறுவுகிறது. நிர்வாகம் என்பது பெரிய இயந்திரம். அதை மேன்மையாக இயக்க விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று உரைத்து தெள்ளத் தெளிவாக பகிர்கிறது.
விதிகளை மீறினால், இயந்திரம் பழுதாகி, இயக்கம் நின்று விடும் எனவும் எச்சரிக்கிறது. அப்படி ஏற்படும் கோளாறு பெரும் சிக்கலாகிவிட்டால், இயந்திரத்தை இயக்குவது கடினம் என அறிவுரைக்கிறது. மேலாண்மை செய்வதற்கான வழிமுறைகளை அனுபவங்களுடன் பகிரும் நுால்.
– ஒளி