எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள யஜுர் வேத நுால். சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என இரு பிரிவுகளில் விளக்குகின்றன.
கிருஷ்ண யஜுர் வேதம், விதி வாதம், அர்த்த வாதம், மந்திர வாதம், நாமதேயம் என்ற பேதங்களை எடுத்துரைக்கிறது. விதி வாதம் மனிதரை சுபகர்மம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது.
மந்திரவாதம் ஆசாரியனைப் போலச் செய்யத் தக்கவைகளைக் காட்டுகிறது. நாமதேயம், மாதா பிதாவைப் போல பெயரிடுவது பற்றி விளக்கம் தருகிறது. கிருஷ்ண யஜுர் வேதத்தின் கீழடங்கிய சோம யாகம், அசுவமேதம், உருத்திரம், தேவ சுபாவம் பற்றி குறிப்பிடுகிறது.
சுக்கில யஜுர் வேதம் இறுதியில் வைக்கப்பட்டுள்ளது. அக்னி பகவானின் அனுக்கிரகங்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. தெளிவாகவும், எளிமையாகவும் உள்ளது.
– ராம.குருநாதன்